அருணாச்சலில் தொடர்ந்து நீடிக்கும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் 5 ராணுவ வீரர்கள் காணவில்லை மற்றும் 4 தொழிலாளர்கள் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
மேல் சுபான்சிரிri மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில், கனமழையினால் ஏற்பட்ட திடீர் வெள்ளம் திபாங் பள்ளத்தாக்கில் உள்ள இரண்டு தற்காலிக முகாம்களை அடித்துச் சென்றது.
இந்த இயற்கை பேரிடரில் 5 ராணுவ வீரர்கள் காணவில்லை மற்றும் 4 தொழிலாளர்கள் உயிரிழந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. மாநிலம் முழுவதும் மழையின் தாக்கம் கடுமையாக உள்ளது.