ஆகஸ்ட் 17 முதல் விசாகப்பட்டினத்தின் அனைத்து வணிக ரீதியிலான விமான சேவைகளும் INS Dega-விலிருந்து போகாபுரம் அல்லூரி சீதாராம ராஜு சர்வதேச விமானத்திற்கு மாற்றப்படும். இதனால் INS Dega வணிக ரீதியான சேவைகளுக்கு 30 ஆண்டுகளுக்கு மூடப்படும்.

சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ஆகஸ்ட் 17, 2026 நள்ளிரவு முதல் விசாகப்பட்டினம் விமான நிலையத்தின் (INS Dega) சிவில் என்கிளேவில் இருந்து அனைத்து வணிக ரீதியிலான விமான சேவைகளும் போகாபுரத்தில் உள்ள அல்லூரி சீதாராம ராஜு சர்வதேச விமானத்திற்கு மாற்றப்படும். இதன் மூலம் சர்வதேச ஏரோட்ரோம் குறியீடான 'VTZ' புதிய விமானத்திற்கு மாற்றப்படும்.

4,727 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இந்த புதிய விமான நிலையம், முதற்கட்டத்திலேயே ஆண்டுக்கு 6 மில்லியன் பயணிகளைக் கையாளும் திறன் கொண்டது. ராணுவம், காவல்துறை மற்றும் அவசர கால விமானங்களுக்கு மட்டும் INS Dega-வில் அனுமதி உண்டு, மற்ற வணிக ரீதியிலான சேவைகள் 30 ஆண்டுகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.