ரெப்போ விகிதம் மாற்றப்படாமல் இருக்கும் என்று அறிவித்துள்ள RBI ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா, இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி குறித்த மதிப்பீட்டை உயர்த்தியுள்ளார். உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் இந்தியப் பொருளாதாரம் சிறப்பாகச் செயல்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) பணவியல் கொள்கைக் குழு கூட்ட முடிவுகளை அறிவித்த ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா, ரெப்போ விகிதத்தை 5.25% ஆக மாற்றாமல் அப்படியே வைத்திருக்க முடிவு செய்துள்ளார். உலகளாவிய விநியோகச் சங்கிலித் தடைகள் மற்றும் போரினால் ஏற்படும் பாதிப்புகளைக் குறிப்பிட்ட அவர், இந்தியப் பொருளாதாரம் வலுவாக உள்ளது என்று கூறினார்.
2026-27 நிதியாண்டிற்கான இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி கணிப்பு 6.6%-லிருந்து 6.7%-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளின் வலுவான செயல்பாடுகள் மற்றும் அதிகரித்து வரும் உள்நாட்டுத் தேவைகள் இந்த வளர்ச்சியைத் தூண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் காலாண்டில் வளர்ச்சி 7% ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.