சென்னை எஸ்ஆர்எம் குளோபல் மருத்துவமனை மருத்துவர்கள், சாலை விபத்தில் பல விலா எலும்பு முறிவுகள் மற்றும் நுரையீரல் காயத்திற்கு உள்ளான 42 வயது நபருக்கு மார்பு சுவர் மறுசீரமைப்பு சிகிச்சையை வெற்றிகரமாக செய்துள்ளனர்.

சாலை விபத்தில் சிக்கி பல விலா எலும்புகள் மற்றும் மார்பு எலும்பு (sternum) முறிவு ஏற்பட்ட 42 வயது நபருக்கு சென்னை எஸ்ஆர்எம் குளோபல் மருத்துவமனை மருத்துவர்கள் மார்பு சுவர் மறுசீரமைப்பு சிகிச்சையைச் செய்துள்ளனர். இந்த விபத்தினால் ஏற்பட்ட கடுமையான பாதிப்பு 'ஃபெயில் சேஸ்ட்' (flail chest) என்ற உயிருக்கு ஆபத்தான நிலையை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில், நோயாளி சுவாசிக்கும்போது மார்புப் பகுதி விரிவடையாமல் உள்நோக்கிச் சுருங்கியது. மருத்துவர்கள் டைட்டானியம் லக்கிங் பிளேட்டுகள் மற்றும் திருகுகளைப் பயன்படுத்தி முறிந்த எலும்புகளை நிலைப்படுத்தினர். இந்த சிக்கலான அறுவை சிகிச்சைக்குப் பிறகு நோயாளி இப்போது சீரான நிலையில் இருந்து வீடு திரும்பியுள்ளார்.