ஜிலேபி மீன் குறைந்த விலையில் கிடைப்பதோடு, இதில் ஒமேகா-3 மற்றும் புரதம் நிறைந்து காணப்படுகிறது. இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
ஜிலேபி மீன் மிகவும் மலிவானது மற்றும் இதில் முட்கள் மிகக் குறைவாக இருப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் எளிதாக உண்ணலாம். இதில் புரதம், ஒமேகா-3 மற்றும் ஒமேகா-6 போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன, அதே சமயம் கொழுப்புச் சத்து குறைவாக உள்ளது.
இந்த மீனில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும், கெட்ட கொழுப்பைக் குறைக்கவும் உதவுகின்றன. இது மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க உதவும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும், இதில் உள்ள கால்சியம் மற்றும் மெக்னீசியம் எலும்புகளை வலுப்படுத்த உதவுகின்றன.
செலினியம் போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் B12 இதில் இருப்பதால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் இரத்த சோகையைத் தவிர்க்கவும் இது உதவுகிறது. இந்த மீனை எண்ணெயியில் பொரிப்பதற்குப் பதிலாக குழம்பாகவோ அல்லது கிரில் செய்தோ சாப்பிடுவது அதிக சத்துக்களைப் பெற உதவும்.