கர்நாடகாவின் சமீபத்திய அறிக்கையின்படி, 2 லட்சம் பேர் எச்ஐவி சிகிச்சையைப் பெற்று வருகின்றனர். மாநிலத்தின் பொறியியல் மற்றும் பட்டப்படிப்பு கல்லூரிகளில் மாணவர்களுக்கு எச்ஐவி பரிசோதனை மற்றும் ஆலோசனை வழங்க கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவின் சமீபத்திய சுகாதார அறிக்கை, மாநிலத்தில் சுமார் 2 லட்சம் பேர் எச்ஐவி சிகிச்சையில் உள்ளதாகத் தெரிவித்துள்ளது. இந்தச் சூழலைக் கையாளவும் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

விசுவேஸ்வரய்ய தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (VTU), அனைத்து பொறியியல் மற்றும் பட்டப்படிப்பு கல்லூரிகளிலும் மாணவர்களுக்கு எச்ஐவி பரிசோதனை மற்றும் ஆலோசனைகளை வழங்க உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே 7,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் எச்ஐவி பாதிப்பால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.