அமெரிக்காவின் நியூ ஜெர்சி கடற்கரையில் திடீரென ஏராளமான சுறா மீன்கள் இறந்து கரை ஒதுங்கியுள்ளன. சுமார் 30 சிறிய சுறாக்கள் மணலில் கிடப்பதைக் கண்டு அப்பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

அமெரிக்காவின் நியூ ஜெர்சி பகுதியில் உள்ள ஜர்சி ஷோர் கடற்கரையில் புதன்கிழமை காலை சுமார் 30 சிறிய சுறா மீன்கள் இறந்து கிடப்பதைக் காண முடிகிறது. கடற்கரைக்கு வந்த மக்கள், மணல் பரப்பில் சிதறிக் கிடக்கும் இந்தச் சுறாக்களைப் பார்த்து வியப்படைந்தனர். சுமார் 10 பிளாக் தூரம் வரை இந்தச் சுறாக்கள் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சுறாக்களின் இறப்பிற்கான துல்லியமான காரணம் இன்னும் தெரியவில்லை என்றாலும், கடல் ஆராய்ச்சியாளர்கள் சில யூகங்களை முன்வைத்துள்ளனர். ஸ்டாக்டன் பல்கலைக்கழக கடல் ஆராய்ச்சியாளர் ஸ்டீபன் நாகிவிச் கூறுகையில், இவை மீன்பிடி வலைகளில் தவறுதலாக சிக்கியிருக்கலாம் (Bycatch) என்று கூறியுள்ளார். இவை 'டாக்ஃபிஷ்' வகை சுறாக்கள் என்பதால், இவை கூட்டமாகச் செல்லும் போது வலைகளில் சிக்கித் தற்கொலை செய்துகொள்ளாமல், விபத்து காரணமாக மரித்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.