அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பிஎச்டி பயின்று வந்த விக்ரம் முபாயி, தனியாக மலையேற்றம் சென்றபோது உயிரிழந்தார். பல நாட்களாகத் தேடலுக்குப் பிறகு அவரது உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் (UCSB) கெமிக்கல் இன்ஜினியரிங் துறையில் பிஎச்டி பயின்று வந்த விக்ரம் முபாயி, தனியாக மலையேற்றம் (hiking) சென்றபோது உயிரிழந்துள்ளார். பிக் பைன் லேக்ஸ் பகுதியில் மலையேற்றத்திற்குச் சென்ற அவர், குறித்த நேரத்தில் திரும்பாததால் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இறுதியில் ஆகஸ்ட் 3 அன்று அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.
விக்ரம் தனது குடும்பத்தினருடன் ஆகஸ்ட் 1 அன்று கடைசியாகப் பேசியுள்ளார். அப்போது தனது ஜிபிஎஸ் (GPS) இருப்பிடத்தைப் பகிர்ந்துள்ளார். அவர் ஒரு அனுபவம் வாய்ந்த மலையேற்ற வீரராக அறியப்பட்டார். உயிரிழப்பிற்கான காரணம் குறித்து அதிகாரிகள் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.