புக்கெட் டெல்லி விமானம் திடீரென 300 அடி உயரம் குறைந்ததில் 17 பேர் காயமடைந்தனர். அந்த விமானியின் இரத்த மாதிரியில் கஞ்சா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 4 ஆம் தேதி புக்கெட்டிலிருந்து டெல்லிக்கு சென்ற ஏர் இந்தியாவின் ஏர்பஸ் A320 விமானம், ஒடிசா மாகாணத்தின் மேல் பறந்தபோது திடீரென 300 அடி உயரம் குறைந்தது. இந்த விபத்தில் 13 பயணிகள் மற்றும் 4 பணியாளர்கள் என மொத்தம் 17 பேர் காயமடைந்தனர். விமானத்தின் ஹைட்ராலிக் மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகளில் கோளாறுகள் இருந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இந்த விபத்தைத் தொடர்ந்து விமானிக்கு நடத்தப்பட்ட போதைப்பொருள் பரிசோதனையில், அவர் கஞ்சா பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து விமான போக்குவரத்து அமைச்சக அதிகாரிகளுடன் ஏர் இந்தியா சிஇஓ கேம்ப்பெல் வில்சன் ஆலோசனை நடத்தினார். தற்போது விமான விபத்து விசாரணைப் பிரிவு (AAIB) இந்த வழக்கை தீவிரமாக விசாரித்து வருகிறது.